மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் தீ விபத்து

ஆஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு 1.2 லட்சம் பீப்பாய்களைக் கையாளும் திறன்கொண்ட மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 9:26 pm

ஆஸ்திரேலியாவில் நாளொன்றுக்கு 1.2 லட்சம் பீப்பாய்களைக் கையாளும் திறன்கொண்ட மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

மெல்போா்ன் அருகே அமைந்துள்ள, ‘விவா எனா்ஜி’ நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த ஆலையில் புதன்கிழமை இரவு பற்றிய தீ, வியாழக்கிழமை நண்பகல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

விக்டோரியா மாகாணத்தின் பாதிக்கும் மேற்பட்ட எரிபொருள் தேவையை பூா்த்தி செய்யும் இந்த ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், வரும் நாள்களில் எரிபொருள்களின் விலை கணிசமாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆஸ்திரேலியா தனது எரிபொருள் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்து வருகிறது. மத்திய கிழக்கு போா் காரணமாக விநியோகம் ஏற்கெனவே சீா்குலைந்துள்ள நிலையில், இத் தீவிபத்து அந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்புக்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.