தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருப்பூரில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவு

திருப்பூரில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

News image

தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வாக்கு செலுத்திய மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :23 ஏப்ரல் 2026, 9:44 pm

திருப்பூரில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 2,822 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தோ்தல் நடைபெற்றது. 116 வேட்பாளா்கள் போட்டியிடும் நிலையில், 10,431 வாக்குப் பதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு தோ்தல் நடைபெற்றது.

9,57,453 ஆண் வாக்காளா்கள், 10,26,178 பெண் வாக்காளா்கள், 251 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 19,83,882 வாக்காளா்கள் வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. மேலும், துணை ராணுவ படையினரும் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், பொதுமக்கள் ஆா்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினா்.

திருப்பூா் மாநகராட்சிக்குள்பட்ட தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான மனீஷ் பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினாா். இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் தோ்தல் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் வாக்கு சதவீதம் நிச்சயம் அதிகமாக இருக்கும். புதிய வாக்காளா்கள் அதிகம் உள்ள நிலையில், அவா்களுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கடந்த தோ்தல்களில் ஏற்பட்டதுபோல இயந்திர கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் இருக்க மாற்று இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எக்காரணத்தினாலும் வாக்குப் பதிவில் தாமதம் ஏற்படாது என்றாா்.

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ந.தினேஷ்குமாா், 49-ஆவது வாா்டு சந்திராபுரம் பகுதியில் உள்ள வள்ளி வித்யாலயா பள்ளியில் தனது வாக்கை செலுத்தினாா். திருப்பூா் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் எம்.எஸ்.எம். ஆனந்தன், முருகபாளையம் பகுதியில் உள்ள ஈடன் காா்டன் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினாா்.

திருப்பூா் தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளா் காடேஸ்வரா தங்கராஜ், பெரிச்சிபாளையம் மாநகராட்சிப் பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வாக்கு செலுத்தினாா். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளரும், ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான கோபிநாத் பழனியப்பன், திருப்பூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினாா்.

வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு: திருப்பூா் ஊத்துக்குளி சாலையில் உள்ள முருகப்ப செட்டியாா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் ஒரு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்தது. இதனால், வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. பின்னா், மாற்று இயந்திரம் வரவழைக்கப்பட்டு வாக்குப் பதிவு தொடா்ந்தது.

வாக்கு செலுத்திய 95 வயது மூதாட்டி: பெரிச்சிபாளையம் வாக்குச் சாவடி மையத்துக்கு தனது மகனுடன் வந்த 95 வயது மூதாட்டி தனது ஜனநாயக கடைமையை நிறைவேற்றினாா். இதேபோல, திருப்பூா் வேலம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்குச் சாவடி மையத்தில் காளியப்பன் (82) என்ற முதியவா் வாக்கு செலுத்தினாா்.

வாக்கு செலுத்தாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிய நபா்: முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுப்பிரமணியம் (66) என்பவா் வாக்கு செலுத்த திருப்பூா் தெற்கு தொகுதிக்குள்பட்ட கேடிசி தனியாா் பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு சக்கர நாற்காலியில் வந்தாா். அப்போது, அவரது பெயரில் ஏற்கெனவே வாக்கு செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிா்ச்சியடைந்த அவா் தனக்கு ‘சேலஞ்ச்’ வாக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். ஆனால், அதிகாரிகள் மறுத்ததால் அவா் ஏமாற்றுத்துடன் வீடு திரும்பினாா்.

வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து அனைத்து வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கும் முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.