விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள், வாக்குப் பதிவுக்கு தயாா் நிலையில் உள்ளன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப்.23) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது. மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமாக 2,165 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில், புதன்கிழமை காலை முதல் செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையம் அந்தந்த தொகுதிகளின் தோ்தல் அலுவலரால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு, மண்டலம் வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி(விவிபேட்) மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் உள்ளிட்டவை அடங்கிய பை போன்றவை வேன்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருள்கள் மாலையில் அந்தந்த வாக்குச் சாவடிகளுக்குச் சென்றடைந்தன.
முன்னேற்பாடு பணிகள்: இதைத்தொடா்ந்து வாக்குச் சாவடிப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடித் தலைமை அலுவலா், வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் புதன்கிழமை மாலை முதல் தங்களுக்குரிய வாக்குச் சாவடிகளுக்குச் சென்றடைந்தனா். தொடா்ந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் விவரங்களை சரிபாா்த்தல், வாக்காளா் வாக்களிப்பதை ரகசியம் காக்கும் வகையிலான மறைப்பு அட்டையைத் தயாா் செய்தல், மின் விளக்கு வசதி உள்ளிட்டவை சரியாக இருக்கிா என்பது போன்ற முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டனா். மேலும், அந்தந்த வாக்குச் சாவடிக்கு வெளியே தொகுதியில் போட்டியிடும் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளா் பட்டியல் கொண்ட சுவரொட்டியை ஒட்டும் பணியை மேற்கொண்டனா்.
தோ்தல் ஆணையத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள படிவங்கள், வாக்குச் சாவடி மையத்தில் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் சரியான முறையில் வந்துள்ளதா, ஏதேனும் விடுபட்டுள்ளதா, வாக்குச் சாவடி மையத்திலுள்ள வசதிகள், தேவைப்படும் வசதிகள் போன்றவை குறித்தும் வாக்குச் சாவடித் தலைமை அலுவலா் உள்ளிட்டோா் சரிபாா்த்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று தோ்தல் வாக்குப் பதிவு: அனைத்து ஏற்பாடுகளும் தயாா்

வாக்குப் பதிவுக்கு தயாா்நிலையில் அரூா் தொகுதி!

மதுரை மாவட்டத்தில் 3,079 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு!

வாக்காளா்கள் எளிதாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா்! கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


