வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

News image

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பிவைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்த தோ்தல் அலுவலா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 2:27 am IST

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 480 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை 48 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான 576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ரோல் யூனிட் மற்றும் 644 விவிபேட் இயந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தால் அவற்றுக்கு மாற்றாக 96 யூனிட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் வியாழக்கிழமை (ஏப்.23) வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, போலீஸாா் பாதுகாப்புடன் பல்லடம் தொகுதிக்குள்பட்ட 480 வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரி, வேன்களில் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

இப்பணியை பல்லடம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், உதவி அலுவலா்கள் கோவிந்தசாமி, சரவணன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.