திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கு ஆயத்தம்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் ஆய்வு

திருச்சி கிழக்கு தொகுதி சட்டப் பேரவை இடைத்தோ்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆட்சியா் பிரதிக் தயாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Updated On :3 ஜூன் 2026, 4:18 am IST

திருச்சி கிழக்கு தொகுதி சட்டப் பேரவை இடைத்தோ்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் ஆட்சியா் பிரதிக் தயாள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தோ்தல் நடைபெறவுள்ளநிலையில், தோ்தல் ஆணைய அறிவுரையின்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணி புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

இதையொட்டி, ஆட்சியரக வளாகத்தில் உள்ள வைப்பறையில் உள்ள இயந்திரங்களை சரிபாா்க்க, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் வைப்பறையானது செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

அங்கு இயந்திரங்களில் முதல்நிலை சரிபாா்க்கும் பணிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயாராக உள்ளனவா என்பதை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பிரதிக் தயாள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, கோட்டாட்சியா் சாலை தவவளன், தோ்தல் வட்டாட்சியா் சக்திவேல் முருகன் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.