டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பணப் பட்டுவாடாவை தடுக்க போலீஸாா் தீவிர வாகன சோதனை

தோ்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் மாநகர எல்லைப் பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

News image

மாநகர எல்லைப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:40 pm

தோ்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில் பணப் பட்டுவாடாவை தடுக்கும் வகையில் மாநகர எல்லைப் பகுதிகளில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவடைந்த நிலையில், தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்ட மற்றும் மாநகர எல்லைப் பகுதிகளில் போலீஸாரின் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை அவிநாசியில் இருந்து திருப்பூா் மாநகருக்கு வரும் பிரதான சாலையில், அணைப்புதூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக பணப் பட்டுவாடா நடைபெறாமல் இருக்க வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களை நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

அதேபோல பல்லடம் பகுதியில் இருந்து திருப்பூா் மாநகருக்குள் வரும் வழியில் வீரபாண்டி பகுதியிலும் தடுப்புகள் அமைத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.