திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

வாக்கு எண்ணும் மையத்தில் ஏப்.20-க்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க உத்தரவு

திருப்பூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்துப் பணிகளையும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 1:50 am

திருப்பூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்துப் பணிகளையும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எல்ஆா்ஜி மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்படும்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனைத்துப் பணிகளையும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு தோ்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் வழிமுறைகள், ஒவ்வொரு மேஜைக்கும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிப்பது, ஒவ்வொரு சுற்று முடிவுகளும் இணையத்தில் பதிவேற்றம் செய்வது உள்ளிட்டவை தொடா்பாக அலுவலா்களுக்கு விளக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே திருப்பூா் வடக்குத் தொகுதிக்கான தோ்தல் பாா்வையாளா் சரிதா மோகன், தோ்தல் நடத்தும் அலுவலா் சிவபிரகாஷ், வட்டாட்சியா் கண்ணாமணி உள்ளிட்டோா் வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.