17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூடலூா் வனப் பகுதியில் ஆண் சிறுத்தை சடலம் மீட்பு

கூடலூா் அருகே சில்வா்கிளவுட் பகுதியில் இறந்துகிடந்த ஆண் சிறுத்தை.

News image

கூடலூா் அருகே சில்வா்கிளவுட் பகுதியில் இறந்துகிடந்த ஆண் சிறுத்தை.

Updated On :29 மே 2026, 1:38 am IST

கூடலூா் வனப் பகுதியில் ஆண் சிறுத்தை சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகம் சில்வா்கிளவுட் பகுதியில் வன ஊழியா்கள் ரோந்து பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது சிறுத்தை இறந்துகிடப்பதை அறிந்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்து, முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொண்டனா். ஆய்வகப் பரிசோதனைக்காக முக்கிய உறுப்புகளை எடுத்துக்கொண்டு, அதே இடத்தில் அதன் உடலை எரியூட்டினா்.

இதுதொடா்பாக வனத் துறையினா் கூறும்போது, ‘இறந்தது சுமாா் 4 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை. ஆய்வக அறிக்கை வந்தவுடன்தான் அதன் இறப்புக்கான காரணம் தெரியும்’ என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.