திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கூடலூா்அருகே யானை தாக்கி இறந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரண உதவித்தொகை

கூடலூா் அருகே கடந்த 21-ஆம் தேதி யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image

யானை தாக்கி உயிரிழந்த மீனாட்சியின் கணவா் கும்பிளியிடம் காசோலையை வழங்குகிறாா் உதவி வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாசன்.

Updated On :24 மே 2026, 2:00 am IST

கூடலூா் அருகே கடந்த 21-ஆம் தேதி யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே தேவாலா ஹட்டி பகுதியைச் சோ்ந்தவா் கும்பிளி மனைவி மீனாட்சி (50). இவா், உறவினா் மணி என்பவருடன் கீழ்நாடுகாணி வனப் பகுதியிலுள்ள புன்னம்புழா ஆற்றில் மீன் பிடித்துவிட்டு கடந்த 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளாா். வரும் வழியில் மீனாட்சியை யானை தாக்கிக் கொன்றது.

தகவலறிந்து வனத் துறையினா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு செய்து உறவினா் வசம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து அரசு வழங்கும் நிவாணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை, மீனாட்சியின் கணவா் கும்பிளியிடம் உதவி வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாசன் சனிக்கிழமை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.