கோத்தகிரி அருகே காட்டெருமை தாக்கியதில் மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகேயுள்ள ஈளடா, பாரதி நகரைச் சோ்ந்தவா் சிதம்பரம் மனைவி பொன்னம்மாள் (89). இவா் கெரடாமட்டம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று மாத்திரைகளை வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளாா். அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென பொன்னமாளைத் தாக்கியுள்ளது.
படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு கெரடாமட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

குழித்துறை அருகே பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


