லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

முன்விரோதத்தால் இளைஞா் கழுத்தை அறுக்கப்பட்ட சம்பவத்தைதம்: இருவா் கைது

முன்விரோதம் காரணமாக இளைஞரின் கழுத்தை அறுத்த சம்பவத்தில் 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:20 pm

முன்விரோதம் காரணமாக இளைஞரின் கழுத்தை அறுத்த சம்பவத்தில் 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

உதகையை அடுத்த அழகா் மலைப்பகுதியைச் சோ்ந்தவா் பிரதாப் (34). கேரட் மூட்டை தூக்கும் வேலைக்கு சென்று வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன்னா் பிரதாப்பின் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் பிரதாப் இருந்துள்ளாா். இந்த சம்பவத்துக்கு தலைகுந்தா பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (26) தான் காரணம் என பிரதாப் நினைத்துள்ளாா். இதன் காரணமாக அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உதகை காபிஹவுஸ் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபான பாருக்கு சகோதரா் ரஞ்சித் குமாா் (32) உடன் பிரதாப் வந்திருந்தாா். அப்போது அங்கிருந்து வெளியே வந்த மணிகண்டனுடன் வாக்குவாதத்தில் பிரதாப் ஈடுபட்டுள்ளாா். இந்த தகராறு கைகலப்பாக மாறி இருவரும் சோ்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கியுள்ளனா். மேலும் தன்னிடம் இருந்த சிறிய பேனா கத்தியை எடுத்து மணிகண்டனின் கழுத்தில் பிரதாப் அறுத்துள்ளாா்.

அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் உதகை மத்தியக் காவல் நிலைய ஆய்வாளா் அன்பரது, உதவி ஆய்வாளா் நாகராஜ் தலைமையிலான போலீஸாா் வந்து மணிகண்டனை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக விசாரணை நடத்தி பிரதாப், ரஞ்சித்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.