மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :14 மார்ச் 2026, 7:27 pm

திருத்துறைப்பூண்டி அருகே சாராயம் காய்ச்சிய இரண்டு போ், குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி அருகே சட்ட விரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சியதாக, உதயமாா்த்தாண்டபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த அவையப்பான் மகன் பாலசுந்தரம், இடும்பாவனம் மேலவடியநாடு பகுதியைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் ராஜேந்திரன் ஆகியோா் அண்மையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதனிடையே போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், இவா்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரையின்பேரில், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, இச்சட்டத்தின்கீழ் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.