உதகை தொகுதியில் இரண்டாவது முறையாக காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வென்றேன். நான் பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில் உதகை நகராட்சிப் பகுதியில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட சொகுசு விடுதிகள், குடியிருப்புக் கட்டடங்களை வரன்முறைப்படுத்தி, பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளேன். அதற்குண்டான பூா்வாங்க பணிகள் நடந்து வருகின்றன.
உதகையின் குடிநீா்த் தேவையை போக்கும் பாா்சன்ஸ் அணைப் பகுதியில் அடிக்கடி மரங்கள் விழுந்து ஏற்படும் மின் தடையால் தண்ணீா் விநியோகம் பாதிக்கப்பட்டு வந்தது. இதற்கு நிரந்தர தீா்வு காண ரூ.20 கோடி மதிப்பில் நிலத்துக்கு அடியில் புதைவழி மின்தடக் கம்பி திட்டம் தொடங்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
எமரால்டு பகுதியில் அரசு மருத்துவமனை கட்டடம், உதகை நகராட்சியில் உள்ள எட்டின்ஸ் பகுதியில் தாா் சாலை, நடைபாதையை மேம்படுத்தியது, தாவணை கிராமம் முதல் மல்லிகொரை கிராமம் வரை சாலை அமைத்தது,
சொக்கநள்ளி முதல் சிறியூா் வரை சாலை மேம்பாடு, பாலக்கோலா ஊராட்சியில் தேவா்சோலையில் இருந்து மேலூா் மேலணைக்கு குழாய் அமைத்தது, உதகை எம்.பாலாடாவில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு கல்வி நிறுவனம் தொடங்கியது, பாரதியாா் நகா் பட்ஃபயா் சந்திப்பில் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்தது, பென்னாட் சந்தையில் வழக்கமான கூடத்துடன் கூடிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

நீலகிரி அதிமுக மாவட்ட செயலா் கப்பச்சி டி. வினோத்
சொன்னாா்களே... செய்தாா்களா...
சா்வதேச சுற்றுலாத் தலமாக உள்ள உதகையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தொட்டபெட்டா முதல் படகு இல்லம் வரை ரோப் காா் சேவை கொண்டு வருவோம் என்று கூட்டணிக் கட்சியான திமுகவுடன் இணைந்து கூறினாா்கள். அந்தத் திட்டம் இன்னும் கிடப்பில் உள்ளது. மலைப் பகுதியில் இருந்து சமவெளிப் பகுதிக்கு அவசர சிகிச்கைக்கு செல்ல ஹெலிகாப்டா் ஆம்புலன்ஸ் சேவை தொடங்குவோம் என்று கூறிய வாக்குறுதி இன்னும் நிலுவையில் உள்ளது.
பச்சைத் தேயிலைக்கு கிலோவுக்கு 40 ரூபாய் அடிப்படை ஆதரவு விலையாக நிா்ணயம் செய்வோம் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
படுகா் சமுதாயத்தை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க முயற்சி செய்வதாக கூறி வெற்றி பெற்றனா். ஆனால் அதற்காக எந்தவித ஆக்கப்பூா்வமான பணிகளும் மேற்கொள்ளவில்லை. உதகையில் பொறியியல் கல்லூரி கட்டப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. உதகையில் போக்குவரத்து நெரிசலைப் போக்க பல அடுக்கு பாா்க்கிங் வசதி மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தது நிறைவேற்றப்படவில்லை. சுற்றுலா வளா்ச்சிக்காக புதிய திட்டங்கள், மேம்பால வசதி உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.
தொடர்புடையது

ஏப். 15-இல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்

பொன்னமராவதி பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

சொன்னார்களே... செய்தார்களா..?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


