அத்திக்கடவு அவிநாசி திட்ட நீரேற்று நிலையம் ஈரோடு மேற்குத் தொகுதியில்தான் தொடங்குகிறது. அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்த திட்டப் பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே செயல் பாட்டுக்கு வந்தது. ஆனால், இப்போது வரை பெரும்பாலான குளங்களுக்குத் தண்ணீர் செல்லவில்லை.
ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டத்தில் ஈரோடு மேற்குத் தொகுதியில் உள்ள மாநகராட்சி வார்டுகளுக்கு 50 சதவீதம் பகுதிகளுக்குகூட குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் சென்னிமலை சாலையை மேம்படுத்தும் பணிகளை 4 ஆண்டுகளாகச் செய்யாமல் அவசரகதியில் இப்போதுதான் தொடங்கி உள்ளனர்.
ஈரோடு ரங்கம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலம் அகலப்படுத்தப்படும் என 2021 தேர்தலின்போது திமுக சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்தப் பணி தொடங்கப்படவில்லை.
ஈரோடு மேற்குத் தொகுதியில் அரசு சட்டக் கல்லூரி, பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது.
இந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஈரோடு மேற்குத் தொகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட நிறைவேற்றப்படவில்லை. வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும் என தேர்தலின்போது வாக்குறுதி அளித்த திமுக. 10 சதவீதம் பேருக்குகூட பட்டா வழங்கவில்லை.
இதனால் இந்தத் தொகுதி மக்கள் பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் ஈரோடு மேற்குத் தொகுதியில் குறிப்பிடும்படி எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக - பாஜக கூட்டணியினா் பொய் பிரசாரம்: சு.முத்துசாமி

பிரிவினையைத் தூண்டுவது காங்கிரஸும் திமுகவும்தான்: எம்.யுவராஜா

அமைச்சரை எதிா்கொள்ளும் பாஜக! ஈரோடு மேற்குத் தொகுதி

நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஈரோடு மேற்குத் தொகுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


