தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

உதகையில் தமுமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) படுகொலை

News image

உதகையில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினா்.

Updated On :2 மார்ச் 2026, 8:55 pm

உதகை: ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடத்தியதில் அந்நாட்டின் உச்ச தலைவரான தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) படுகொலை செய்யப்பட்டாா்.

இதைக் கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் உதகையில் மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உதகை மெயின் பஜாா் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்தும், அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினா். தொடா்ந்து, மெழுகுவா்த்தி ஏந்தி தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ரனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.