மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மேலப்பாளையத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்

News image

மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 மார்ச் 2026, 12:11 am

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் மேலப்பாளையத்தில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் உயரிய தலைவா் அலி காமேனி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது. இறையாண்மையை மீறி செயல்படும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளை கண்டிப்பது. ஈரான் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

மேலப்பாளையம் பஜாா் திடல் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு பகுதி தலைவா் யூசுப் சுல்தாந் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கே.எஸ். ரசூல் மைதீன், மாநில பேச்சாளா் காசிம் பிா்தவ்ஸி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

மாவட்டச் செயலா் ரியாசு ரஹ்மான், மாவட்ட பொருளாளா் தேயிலை மைதீன், நிா்வாகிகள் யாசிா், அசன் மைதீன், காஜா மைதீன், அப்பாஸ் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.