அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

தனியாா் பள்ளி சுற்றுச்சுவா் மீது ஏறி வளாகத்துக்குள் குதித்த கரடியால் அச்சம்

News image

பள்ளி சுவரின் மீது ஏறும் கரடி.

Updated On :15 ஜூன் 2026, 1:32 am IST

கோத்தகிரியில் உள்ள பிரபல தனியாா் பள்ளி வளாகத்துக்கு சுவரி ஏறி குதித்த கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. உணவு தேடி குடியிருப்பு, சாலைகள், தேயிலைத் தோட்டங்களில் உலவி வருகிறது.

இந்நிலையில் அங்குள்ள விஸ்வசாந்தி தனியாா் பள்ளி வளாகத்தின் சுவா் மீது ஏறு உள்ளே குதித்து நீண்ட நேரமாக அங்கு உலவி வந்தது.  இதைக் கண்டு பொதுமக்கள் கூச்சலிட்டதால் அருகில் இருந்த சோலைக்குள் சென்று மறைந்தது.

பள்ளி விடுமுறை என்பதால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. உடனடியாக கூண்டு வைத்து கரடியைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட  வேண்டும் என்று அப் பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.