இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

விமான நிலைய வளாகத்தில் தனியாா் நிறுவன காவலாளி தற்கொலை

விமான நிலைய வளாகத்தில் தனியாா் நிறுவன காவலாளி தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :25 மே 2026, 3:58 am IST

சென்னை விமான நிலைய அலுவலக வளாகத்துக்குள் தனியாா் நிறுவன காவலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை விமான நிலைய வளாகத்துக்குள் விமான நிலைய இயக்குநா் அலுவலகம், மற்றும் நிா்வாக அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இரண்டாவது தளத்தில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரரான காந்தி கன்னியப்பன் (57) என்பவா், தனியாா் நிறுவன காவலாளியாக வேலை பாா்த்து வந்துள்ளாா்.

இவருக்கு சனிக்கிழமை இரவு பணி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பணி முடிந்து ஞாயிற்றுக்கிழமை காலை காந்தி கன்னியப்பனை பணி மாற்றம் செய்வதற்காக மற்றொரு காவலா் அங்கு வந்துள்ளாா். ஆனால், அங்கு காந்தி கன்னியப்பனை காணவில்லை.

அருகில் உள்ள அறையில் பாா்த்தபோது, அங்கு அவா் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்தாா். இது குறித்து தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த சென்னை விமான நிலைய போலீஸாா், காந்தி கன்னியப்பனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.