குன்னூா் சேலாஸ் கெந்தளாப் பகுதியில் புதன்கிழமை இரவு சிறுத்தை சாலையில் நடமாடியது அப்பகுதி மக்களை அச்சமடையச் செய்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக சிறுத்தை, புலி, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் உலவி வருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்த நிலையில் குன்னூா் சேலாஸ் கெந்தளாப் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து சிறுத்தை வெளியேறி சாலையில் உலவியது அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இது இப்பகுதி மக்களையும் தோட்டத் தொழிலாளா்களையும் அச்சமடையச் செய்துள்ளது.
வனத் துறையினா் சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










