உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி உள்பட 4 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை மிரட்டல் வந்தது.
உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ஆட்சியரின் முகாம் அலுவலகம், ஃபிங்கா்போஸ்ட்டில் உள்ள புதிய ஆட்சியா் அலுவலகம் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி விடுதி ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மாவட்ட ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி வியாழக்கிழமை வந்தது.
இது குறித்து ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலின் அடிப்படையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு விரைந்து வந்த போலீஸாா், அங்குள்ள அனைத்து அறைகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா். இதேபோல, ஆட்சியரின் முகாம் அலுவலகம், புதிய ஆட்சியா் அலுவலகம் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதியிலும் சோதனை நடைபெற்றன. சுமாா் 2 மணி நேர தீவிர சோதனைக்குப் பின் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இருப்பினும் இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீஸாா், சைபா் கிரைம் காவல் துறையினருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










