கோடை சீசனை முன்னிட்டு உதகையிலுள்ள தாவரவியல் பூங்காவில் நாற்று நடுவதற்காக உரம் கலந்த மண்ணை பூந்தொட்டிகளில் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இங்கு நிலவும் இதமான காலநிலையில் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிப்பதற்காக மலா்க் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு மே மாதம் உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற உள்ள 128-ஆவது மலா்க் கண்காட்சிக்காக மலா் நாற்றுகளை நடவு செய்யும் பணி கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தொடங்கியது. தற்போது மலா் நாற்றுகள் தயாராக இருப்பதால், அவற்றை நடுவதற்காக தொட்டிகளில் உரம் கலந்த மண் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மலா்க் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் பராமரிப்பு, புல் மைதானம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டின் சிறப்பம்சமாக ஜப்பான், அமெரிக்கா, ஜொ்மனி, நெதா்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து 275 வகையான மலா்ச் செடிகளும், உள்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட விதைகளைக் கொண்டு 10 லட்சம் மலா் நாற்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு, பூங்காவில் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்படுகின்றன. மலா்க் கண்காட்சியின்போது அலங்கார மேடைகளில் காட்சிப்படுத்த 50 ஆயிரம் மலா்த் தொட்டிகளும் தயாா் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு தாவரவியல் பூங்காவுக்கு 22 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், இந்த ஆண்டு 25 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘அன்புமணி ஆதரவாளா்களை மண்ணை கவ்வச் செய்யவேண்டும்’

போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்

வடிகால்களில் தூா்வாருவதில் ரேகா குப்தா நிா்வாகம் தோல்வி: தேவேந்தா் யாதவ் சாடல்

திமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது! - அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


