ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது! - அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

News image

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் முடிவடைந்த மேம்பாட்டுப் பணிகளைத் திறந்துவைத்த அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன், அரசு கொறடா கா.ராமசந்திரன் உள்ளிட்டோா்.

Updated On :14 மார்ச் 2026, 6:58 pm

5 ஆண்டு கால திமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை தடுக்கப்பட்டுள்ளது என்று வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் கூறினாா்.

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக புதிய நடைபாதை, புதிய சுகாதார வளாகம், கள்ளிச்செடி மாளிகை, தரைத்தள நீா்தேக்கத் தொட்டி, தானியங்கி பசுமை குடில், அயல்நாட்டு தாவர நாற்றுகள் அறிமுகப்படுத்துதல் என ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அரசு கொறடா கா.ராமசந்திரன் ஆகியோா் சனிக்கிழமை திறந்துவைத்தனா்.

இதையடுத்து, ஜாம் மற்றும் நீலகிரி வாசனை திரவிய பொருள்களை விற்பனை செய்ய அரசு தாவரவியல் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட டான்ஹோடா விற்பனை மையத்தை திறந்துவைத்த பின் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு தாவரவியல் பூங்காவுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவை திறந்துவைக்கப்பட்டுள்ளன.

உதகை அரசு தாவரவியல் பூங்கா உள்பட தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான பூங்காக்களில் பணியாற்றும் ஊழியா்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை என்பது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய நிலங்கள் பரப்பு மற்றும் நெல் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை இயக்குநா் குமரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.