திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது என்று பாஜக மாநில துணைத் தலைவா் குஷ்பு தெரிவித்தாா்.
உதகை சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் போஜராஜனை ஆதரித்து மஞ்சூா் பஜாா் பகுதியில் குஷ்பு வெள்ளிக்கிழமை பேசியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்றவுடன் அதிமுக, பாஜக அளித்த தோ்தல் வாக்குறுதிகள் உங்களைத் தேடி வரும்.
திமுக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக கூறுகின்றனா். ஆனால் சிறுமி முதல் 80 வயது மூதாட்டி வரை பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திமுக ஏன் வரவேற்கவில்லை. திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரியோ, பள்ளிக்கூடமோ கட்டி உள்ளாா்களா? எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் உதவியுடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன. திமுக ஆட்சியில் ஊழல் மட்டும் அதிகரித்துள்ளது என்றாா்.
முன்னதாக ஹெலிகாப்டரில் உதகை தீட்டுக்கல் ஹெலிபேட் தளத்தில் வந்திறங்கிய குஷ்பூவின் கைப்பை மற்றும் ஹெலிகாப்டரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: குஷ்பு

திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

தமிழகத்தில் போக்ஸோ வழக்குகள் 125 சதவீதம் அதிகரிப்பு: குஷ்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


