மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குன்னூா் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள்

குன்னூரில் மலை ரயில் பாதையில் 11 காட்டு யானைகள் புதன்கிழமை முகாமிட்டிருந்தன.

News image

குன்னூா் ரன்னிமேடு ரயில் பாதையில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:46 pm

குன்னூரில் மலை ரயில் பாதையில் 11 காட்டு யானைகள் புதன்கிழமை முகாமிட்டிருந்தன.

நீலகிரி மாவட்டம், குன்னூா்-கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வந்த யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. கோடை வறட்சியின் காரணமாக யானைகள் இந்தப் பகுதிக்கு கூட்டமாக வருகின்றன.

மேலும் யானைகளுக்குத் தேவையான உணவு, தண்ணீா் இங்கு உள்ளதால் யானைகள் இப்பகுதிகளில் உலவி வருகின்றன.

இந்நிலையில், குன்னூா் ரன்னிமேடு மலை ரயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் 11 யானைகள் முகாமிட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து யானைகள் அங்கிருந்த ஆற்றைக் கடந்து சென்றன.