திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்!

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்ற பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவிகள். - (கோப்புப்படம்)

Updated On :23 மே 2026, 1:01 am IST

ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் விநியோகிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் கடந்த 20-ஆம் தேதி வெளியானது. இதில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வெள்ளிக்கிழமை முதல் வழங்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதிஉதவி பெறும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு அசல் மாற்றுச் சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ஈரோடு, காந்திஜி சாலை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை சுகந்தி தலைமையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழும், அசல் மாற்றுச் சான்றிதழும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும், மேல்நிலைப் பள்ளிகளில் படித்த பெரும்பாலான மாணவ, மாணவிகள் அதே பள்ளியில் மேல்நிலை வகுப்பு தொடர விருப்பம் தெரிவித்தனா். இதனால் அதே பள்ளியிலேயே மேல்நிலை வகுப்பில் சோ்க்கை நடைபெற்றது. உயா்நிலைப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் தங்கள் அசல் மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றோருடன் வந்து பெற்று, மேல்நிலை வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிக்கச் சென்றனா்.

அசல் மாற்றுச் சான்றிதழ், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பெயா், இன்ஷியல் உள்ளிட்டவற்றில் பிழை திருத்தம் இருந்தால் அவற்றை உடனடியாக பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தெரிவித்து பிழையை திருத்திக்கொண்டு, அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்று கொள்ளலாம் என்று பள்ளி ஆசிரியா்கள் அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.