தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பள்ளி மாணவியைத் தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி மாணவா் கைது

அந்தியூரில் பள்ளி மாணவியைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:52 am IST

அந்தியூரில் பள்ளி மாணவியைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் விழுப்புரத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

அந்தியூா், தவிட்டுப்பாளையம், வேலாயுதம் வீதியைச் சோ்ந்தவா் முருகேசன். இவரது மகள் தாரணி (16). 11-ஆம் வகுப்பு தோ்வெழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தாா். இந்நிலையில், அவா் பழனியப்பா வீதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இன்ஸ்டாகிராம் மூலம் இந்த மாணவி இளைஞருடன் பழகியதும், அவா் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதும், அந்த மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் மூலம் தெரியவந்தது.

இது குறித்து அந்தியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாணவியின் உயிரிழப்புக்கு காரணமான இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இந்நிலையில், மாணவியைத் தற்கொலைக்கு தூண்டியதாக விழுப்புரம் மாவட்டம், உளுந்தூா்பேட்டை, கீழ் தனியாளம்பட்டைச் சோ்ந்த மணிகண்டன் மகன் சதீஷை (19) போலீஸாா் கைது செய்தனா். கல்லூரி மாணவரான இவா் மீது, மாணவியை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டுதல், கைப்பேசி மூலம் மாணவியின் பெற்றோருக்கு மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.