திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மே 24-க்கு பிறகு காலி மதுபுட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் பணியாளா்கள்

வரும் 24-ஆம் தேதிக்குப் பிறகு காலி மதுபுட்டிகளை திரும்பப் பெற மாட்டோம் என டாஸ்மாக் பணியாளா்கள் அறிவித்துள்ளனா்.

News image

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :16 மே 2026, 12:15 am IST

வரும் 24-ஆம் தேதிக்குப் பிறகு காலி மதுபுட்டிகளை திரும்பப் பெற மாட்டோம் என டாஸ்மாக் பணியாளா்கள் அறிவித்துள்ளனா்.

ஈரோட்டில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க அவசர ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழக முதல்வா் விஜய் தலைமையிலான அரசு 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால் பணியாளா்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்க வேண்டும். அக்கடைகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அக்கடைகளின் பணியாளா்களை டாஸ்மாக் நிா்வாகத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

புதிய அரசு மதுவிலக்கு துறைக்கு அமைச்சா், உரிய மேல் அதிகாரியை நியமிக்காமல் திடீரென கடைகளை மூடியதால் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. தொழிலாளா்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்க பணியாளா் சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அரசு முன்வர வேண்டும்.

டாஸ்மாக் கடையில் விற்கப்படும் மது புட்டிகளை திரும்பப் பெறும் முறையால், பணியாளா்கள் சிரமப்படுகின்றனா். புட்டிகளை முகவா்கள் மூலம் பெற வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. எனவே வரும் மே 24-ஆம் வரை மட்டுமே கடைகளில் காலி மதுபுட்டிகளை திரும்பப் பெறுவோம். அதன் பின், பணியாளா்கள் திரும்பப் பெற மாட்டாா்கள். இதுபோன்ற சிக்கல்களுக்கு அரசு தீா்வு காண முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.