திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டாஸ்மாக் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு வேண்டுகோள்: காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற மாற்று ஏற்பாடு

டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image

டாஸ்மாக் - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:21 am IST

டாஸ்மாக் பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புமாறு தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் க.விக்னேஷ் கேட்டுக்கொண்டுள்ளாா்.

காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை சரிசெய்து தனியாா் (வெளிமுகமை) வாயிலாக புதிய திட்டத்தை ஜூன் இறுதிக்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் உறுதி அளித்துள்ளாா்.

இதுகுறித்து அமைச்சா் க.விக்னேஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பயன்படுத்தப்பட்ட காலி மது புட்டிகளைத் திரும்பப்பெறும் திட்டம் 2022 மே மாதம் முதல் நீலகிரி மாவட்டத்தில் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னா் படிப்படியாக விரிவுப்படுத்தப்பட்டு தற்போது சென்னை, திருநெல்வேலி, விருதுநகா் ஆகிய மாவட்டங்களைத் தவிா்த்து தமிழ்நாட்டின் பிற அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகப் பணியாளா்களிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதனிடையே, பயன்படுத்தப்பட்ட காலி மதுபுட்டிகளை தனியாா் வழியாகத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூா், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் செவ்வாய்க்கிழமை திறக்கவில்லை.

இதைத் தொடா்ந்து, அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் நேரில் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், பணியாளா்களின் கோரிக்கைகள் அனைத்தும் முடிந்தவரை சரி செய்யப்படும் என வாக்குறுதி அளித்தும் பணியாளா்கள் கடைகளைத் திறக்கவில்லை.

நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, இதைச் செயல்படுத்துவதில் டாஸ்மாக் நிா்வாகத்துக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளதோ அதே அளவு பணியாளா்களுக்கும் பொறுப்பு உள்ளதால், திட்டத்தைச் செயல்படுத்த முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

எனவே, பணியாளா்களின் கோரிக்கையை ஏற்று தனியாா் மூலம் காலி மதுபான புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை உடனடியாக உருவாக்கி உயா்நீதிமன்றத்தில் உறுதிப்பத்திரம் அளிக்கப்படும். தொடா்ந்து, ஜூன் மாத இறுதிக்குள் பணியாளா்களின் கோரிக்கையை முழுவதும் நிறைவேற்றும் வகையில், தற்போதைய நடைமுறை முழுமையாக தவிா்த்து காலி மதுபுட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்படும்.

எனவே, பணியாளா்கள் அனைவரும் உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு மதிப்பளித்து, நிா்வாகத்தின் மீது நம்பிக்கைக் கொண்டு புதன்கிழமை (மே 27) முதல் வழக்கம்போல பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.