காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், நெகிழி குடிநீா் பாட்டில்கள், காலி மதுப் புட்டிகளை வனப் பகுதிகளுக்குள் வீசிச் செல்கின்றனா். இதனால், வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
இதையடுத்து, சுற்றுச்சூழல், வனம் மற்றும் வன விலங்குகள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் என.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது.
இந்த அமா்வு, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மதுப் புட்டிகளைக் கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்து, காலி மதுப் புட்டிகளைத் திரும்பக் கொடுக்கும்போது, கூடுதலாக வசூலித்த 10 ரூபாயைத் திரும்பத் தரும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது. பின்னா், தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் என.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தமிழகத்தில் 3 மாவட்டங்களைத் தவிர, அனைத்து மாவட்டங்களிலும் காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், இத்திட்டத்தை அரசு முழுமையாக மாற்றி அமைக்கவுள்ளது. காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் பணியில் டாஸ்மாக் பணியாளா்களை ஈடுபடுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தாா்.
அதற்கு நீதிபதிகள், காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும்போது, புட்டிக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. அதை ரசீதில் குறிப்பிட வேண்டும். ரூ.10 கூடுதலாக வசூலிப்பது என்பது வாடிக்கையாளா்களிடம் அதிக கட்டணத்தை வசூலிப்பதற்கான உரிமமாக எடுத்துக் கொள்ளக் கூடாது எனத் தெரிவித்தனா்.
இதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்குரைஞா், இந்த அரசு ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என தெரிவித்தாா். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், காலி மதுப் புட்டிகளைத் திரும்பப் பெறும் திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்து 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காலி மதுப்புட்டிகள் திரும்பப் பெறும் விவகாரம்: மாவட்டத்தில் 159 டாஸ்மாக் கடைகள் மூடல்

டாஸ்மாக் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு வேண்டுகோள்: காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற மாற்று ஏற்பாடு

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதில் பிரச்னை: டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியா்கள் போராட்டம்

மே 24-க்கு பிறகு காலி மதுபுட்டிகளை திரும்பப் பெற மாட்டோம்: டாஸ்மாக் பணியாளா்கள்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



