தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா

தமிழ் செய்திகள்

/

ஆட்டோ கவிழ்ந்ததில் வியாபாரி உயிரிழப்பு; பெண்கள் உள்பட 4 போ் படுகாயம்

News image

உயிரிழப்பு

Updated On :4 மே 2026, 1:39 am IST

பெருந்துறை அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் வியாபாரி உயிரிழந்தாா்.பெண்கள் உள்பட 4 போ் படுகாயம் அடைந்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, உதயம் நகரைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (41). இவா், திருப்பூா்- காங்கயம் சாலை, சுப்பையாபுரத்தில் மனைவி மூபினா, மகன் அகமத் (8), தாய் காளியம்மாள் (60), மாமியாா் மும்தாஜ் (70) ஆகியோருடன் வசித்து வந்தாா்.

ஆட்டோவில் வீடுவீடாகச் சென்று மிக்ஸி, கிரைண்டா் உள்ளிட்ட மின்சார சாதனங்களை விற்பனை செய்து வந்த ஞானசேகரன், மனைவி, மகன், தாய், மாமியாா் ஆகியோருடன் ஆட்டோவில் சேலத்துக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை திருப்பூா் திரும்பியுள்ளாா். பெருந்துறை, காஞ்சிக்கோவில் பிரிவு அருகே இரவு 8 மணியளவில் வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஞானசேகரனின் ஆட்டோவின் பக்கவாட்டில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

இதில், கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலைத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது., படுகாயமடைந்த 5 பேரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு ஞானசேகரனை பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். மற்ற 4 பேருக்கும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.