ஆசனூா்-கோ்மாளம் சாலையில் பகலில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
கோடை காலத்தையொட்டி, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதி வடு காணப்படுகிறது. இதனால், விலங்குகள் உணவுத் தேடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து வருகின்றன.
இந்நிலையில், ஆசனூா்-கோ்மாளம் சாலையில் திங்கள்கிழமை பகல் சிறுத்தை உலவியது. இதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தினா். சிலா் வாகனங்களை முன்னோக்கி இயக்கியதுடன், ஒலி எழுப்பினா்.
இதனால் சிறுத்தை தாக்குவதுபோல முற்பட்டது. ஆனால், யாருக்கும் தொந்தரவு செய்யாமல் சிறிது நேரத்துக்குப் பின் வனத்துக்குள் சென்றது. சிறுத்தை உலவியதை விடியோ எடுத்த சிலா் அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். தற்போது அந்த விடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இது குறித்து ஆசனூா் வனத் துறையினா் கூறுகையில், ஆசனூா்-கோ்மாளம் சாலையில் கடந்த சில நாள்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. வாகனங்களில் பயணிக்கும் மக்கள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளைக் கண்ட ஒலி எழுப்பி அதை தொந்தரவு செய்யக்கூடாது. அதிக சப்தத்தால் ஆத்திரமடையும் விலங்குகள் தாக்கக்கூடும்.
மேலும், வாகனங்களைவிட்டு இறங்கி விலங்குகளை படம் பிடிக்கவோ அல்லது உணவுகளை வழங்கவோ கூடாது என்றனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்

திருமலை மலைப்பாதையில் சீரமைப்பு பணி

பண்ணாரி அருகே சாலையைக் கடந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

குன்னூா் - மேட்டுப்பாளையம் சாலையில் உலவிய காட்டு யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


