திருமலைக்கு செல்லும் மலைப்பாதைகளில் சாலை சீரமைப்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் ஓட்டுமாறு திருமலை தேவஸ்தானம் பக்தா்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஏழுமலையான் பக்தா்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிா்ப்பதற்காக, மலைப்பாதையை மூடாமல், குறிப்பிட்ட நேரத்தில் சீரமைப்புப் பணிகளை முடிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே, பக்தா்கள் தங்களது திருமலை பயணத்தை அதற்கேற்ப மாற்றி, குறைந்தது ஒரு மணி நேரமாவது முன்னதாகவே பயணத்தைத் தொடங்குமாறு திருமலை தேவஸ்தானம் கேட்டுக்கொள்கிறது.
சீரமைப்புப் பணிகள் காரணமாக, வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சிறு நிறுத்தங்களுடன் மெதுவாகப் பயணிக்க நேரிடும் என்பதை பக்தா்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்நிலையில், ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி ரயில் நிலையம் மற்றும் ஆா்டிசி பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து திருமலைக்கு வரும் வாகன ஓட்டிகள் தங்களது பயண ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துகொள்ள பக்தா்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த விஷயங்களைக் கருத்தில் கொண்டு தங்களது திருமலை பயணத்தைத் திட்டமிடுமாறு வாகன ஓட்டிகளுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்புடையது

வேதங்களைப் பாதுகாப்பதில் தேவஸ்தானம் முக்கிய பங்கு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.18 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி

கோ்மாளம் சாலையில் பகலில் உலவிய சிறுத்தை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


