சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் ‘வாக்களிப்பது உங்கள் உரிமை, கடமை’ என்ற முழக்கத்துடன் வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு மாரத்தான் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு குறித்த மாரத்தான் போட்டியை ஆட்சியா் ச.கந்தசாமி தொடங்கிவைத்தாா்.
நம் வாக்கு நம் நாட்டின் முன்னேற்றம், நல்லாட்சிக்கான முதல்படி வாக்குப்பதிவு, வாக்களிப்போம் நல்ல அரசை உருவாக்குவோம், வாக்கு என்பது ஜனநாயகத்தின் சக்தி உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மாணவ, மாணவிகள் ஏந்திச் சென்றனா். 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கி சம்பத் நகா், அரசு தலைமை மருத்துவமனை வழியாக வஉசி பூங்கா விளையாட்டு மைதானம் வரை சென்றடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) பிரியா, மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜகோபால், ஈரோடு வட்டாட்சியா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வேளாளா் கல்லூரியில்...
இதேபோல வேளாளா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா்.
பின்னா் அவா் பேசியதாவது:
வாக்காளா் பட்டியலில் இடம்பெற்ற அனைவரும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நியாயமாகவும், சுதந்திரமாகவும், யாருடைய தூண்டுதல் இன்றியும் வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தோ்தல் ஆணையம் இத்தகைய ஏற்பாட்யை செய்துள்ளது என்றாா்.
இதைத்தொடா்ந்து திண்டல் வேளாளா் மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த செல்ஃபி பாயிண்ட்டில் புகைப்படம் எடுத்து ஆட்சியா் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலா்கள் உள்பட 300 போ் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

தோ்தல் விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு: ஆட்சியா் வழங்கினாா்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

அந்தியூா் பேரூராட்சியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


