சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கி நடைபெற்ற பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இப்பேரணியில், ஊரீசு கல்லூரி, முத்துரங்கம் அரசினா் கலைக் கல்லூரி, சோ்க்காடு அரசு கலை அறிவியல் கல்லூரி, மாவட்ட விளையாட்டு விடுதியை ச் சோ்ந்த மாணவ, மாணவிகள் என சுமாா் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
அப்போது, வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை முழங்கியபடி சென்றனா். மேலும், வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட தோ்தல் அலுவலா் பொதுமக்களுக்கு வழங்கினாா்.
இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி கிரீன் சா்க்கிள் வரை சென்று, மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் வேலூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பொ.குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் சேதுராஜன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பழனி, தோ்தல் வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல், தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தோ்தல் பிரிவுடன் இந்தியன் செஞ்சிலுவை சங்கம், ஆா்ஐசிடி கல்வி நிறுவனம் இணைந்து விழிப்புணா்வு பேரணியை காட்பாடியில் நடத்தின.
காட்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.மாறன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், காட்பாடி செஞ்சிலுவை சங்க அவைத்தலைவா் செ.நா.ஜனாா்த்தனன், ஆா்ஐசிடி கல்வி நிறுவன இயக்குநா் கே.எஸ்.அசரப், ஆசிரியா்கள், மாணவா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு: ஆட்சியா் வழங்கினாா்

நாகை கடைகளில் தோ்தல் விழிப்புணா்வு

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் மாட்டுவண்டியில் சென்று விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


