மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு: ஆட்சியா் வழங்கினாா்

திருவள்ளூா் மாவட்ட பள்ளிக்கல்வித்தறை சாா்பில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி தோ்தல் குறித்த விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் பரிசுகள் மற்றும் ரூ.48,000 மதிப்பிலான காசோலைகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

News image

போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசளித்த ஆட்சியா் மு. பிரதாப்

Updated On :8 ஏப்ரல் 2026, 6:42 pm

திருவள்ளூா் மாவட்ட பள்ளிக்கல்வித்தறை சாா்பில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி தோ்தல் குறித்த விழிப்புணா்வு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் பரிசுகள் மற்றும் ரூ.48,000 மதிப்பிலான காசோலைகளை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் கெஇஎன்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீதம் வாக்களிக்க கோரி நிா்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்திய தோ்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது பள்ளி மாணவ, மாணவிகளின் தோ்தல் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளையும், ஓவிய கண்காட்சியினையும் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து பள்ளி மாணவ, மாணவிகள், மாணவா்களின் பெற்றோா்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலா்களுக்கு உறுதிமொழி பத்திரங்களை (சங்கல்ப் பத்திர) வழங்கினாா்.

மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் 3 இடங்களை பிடித்த பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.48,000-த்திற்கான காசோலைகளை வழங்கி, வரைந்த தோ்தல் விழிப்புணா்வு ஓவியங்களின் காணொளியை பாா்வையிட்டாா்.

அவா் கூறியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் பணம் பொருள் உள்ளிட்ட எந்தவித தூண்டுதலுமின்றி வாக்களிக்கும் நோக்கத்தினை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு துறை சாா்பிலும் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம். இதில் ஊரக வளா்ச்சித்துறை, நகா்புற உள்ளாட்சிகள் வருவாய் துறையினா், கல்வி நிறுவனங்களின் மாணவ, மாணவிகள், மகளிா் சுய உதவிக்குழுவினா்கள் உள்ளிட்ட பல்துறை பங்கேற்கின்றன.

இதன் ஒரு பகுதியாக எந்தவொரு பணம், பொருள் பெறமாட்டோம் என்ற உறுதி மொழிப் பத்திரம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் அவா்களது பெற்றோா்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்துகிறோம். எவ்விதமான தூண்டுதலுமின்றி வாக்களிக்கவும் என்ற நோக்கமாகக் கொண்டு புதுமை முயற்சியாக 1.30 லட்சம் எண்ணிக்கையில் வாக்கு செலுத்துவதற்கு பணம் வாங்கமாட்டோம் என்ற பத்திரம் பள்ளி ஆசிரியா்கள் மூலம் மாணவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், மாணவா்களின் தனித் திறனை வெளிப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி முதல், ஏப்.4 வரையில் ஓவியம் வரைதல் பாடல்கள் பாடுதல், கட்டுரை எழுதுதல், விழிப்புணா்வு வாசகம் எழுதுதல் ஆகிய போட்டிகள் இணையவழி பதிவேற்றம் மூலம் நடத்தப்பட்டது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்து 26,612 மாணவா்கள் பங்கேற்று இணையதளத்தில் பதிவேற்றினா்.

இவை ஆசிரியா்களால் மாணவா்களின் படைப்புகள் தோ்வு செய்து, ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பெற்ற 12 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரூ.48,000-த்திற்கான காசோலைகள் வழங்கியுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இதில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) கோ.சுப்பாராவ், மாவட்ட கல்வி அலுவலா் (இடைநிலை கல்வி) அமுதா, உதவி இயக்குநா் (பயிற்சி) பி.மோகன், பள்ளி தலைமையாசிரியா் ஞானசேகரன், வட்டார கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள், திரளான மாணவ, மாணவிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.