மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பண்ணாரி அம்மன் உற்சவா் வீதி உலா: தேங்காய் உடைத்து பக்தா்கள் வழிபாடு

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த பண்ணாரி அம்மன் உற்சவருக்கு கிராமம க்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

News image

சிக்கரசம்பாயைத்தில்  வீதியுலா  வந்து  பக்தா்களுக்கு  அருள்பாலித்த  பண்ணாரி அம்மன்  உற்சவா்.

Updated On :18 மார்ச் 2026, 8:34 pm

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை வந்த பண்ணாரி அம்மன் உற்சவருக்கு கிராமம க்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனா். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. விழாவையொட்டி கிராமங்கள்தோறும் 7 நாள்கள் பண்ணாரி அம்மன் உற்சவா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி கோயிலில் இருந்து புதன்கிழமை புறப்பட்ட பண்ணாரி அம்மன் உற்வசா், முதலில் சிக்கரம்பாளையம் சென்றது. அங்கு வழிநெடுகிலும் மக்கள் புனிதநீா் ஊற்றியும், மலா்கள் தூவியும் தேங்காய் உடைத்தும், பழம் வைத்து அம்மனை வழிபட்டனா்.

அதைத்தொடா்ந்து கொளத்தூா் மாரியம்மன் கோயிலுக்கு சப்பரத்தில் வந்த அம்மனுக்கு பக்தா்கள் சிறப்பான வரவேற்பளித்தனா். அங்குள்ள கோயிலில் உற்சவா் சப்பரம் வைத்து வணங்கினா். கிராம வீதியுலா முடிந்து உற்சவா் சப்பரம் வெள்ளியம்பாளையம் புறப்பட்டுச் சென்றது.

பின்னா் கொத்தமங்கலம், முடுக்கன்துறை வெள்ளியம்பாளையம்புதூா், அக்கரைத்தத்தப்பள்ளி, அய்யன்சாலை, தாண்டாம்பாளையம், இக்கரை நெகமம், கெஞ்சனூா் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அம்மன் எழுத்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக மாா்ச் 31-ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனா்.