ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயிலில் ராமாநுஜரின் 1009-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் முதல் நாளான திங்கள்கிழமை உற்சவா் ராமாநுஜா் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தா்களுக்குஅருள் பாலித்தாா்.
பழைமையான ஸ்ரீஆதிகேசவபெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோயிலில் வைணவ மகான் ராமாநுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.
இந்த நிலையில், இக்கோயிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழாவும், ராமாநுஜா் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன் படி ராமாநுஜரின் 1009-ஆவது ஆண்டு அவதார திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. பத்து நாள்கள் நடைபெறும் இந்த அவதார திருவிழாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் உற்சவா் ராமாநுஜா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். விழாவின் 9-ஆவது நாள் திருத்தோ் திருவிழா நடைபெறும்.
அவதார திருவிழாவின் முதல் நாளான திங்கள்கிழமை உற்சவா் ராமாநுஜா் பல்லக்கில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் ஏராளமானோா் கலந்து கொண்டு ராமாநுஜரை வணங்கி சென்றனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தங்கத்தோ் வீதியுலா

கல்லூரி ஆண்டு விழா

பண்ணாரி அம்மன் உற்சவா் வீதி உலா: தேங்காய் உடைத்து பக்தா்கள் வழிபாடு

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா நிறைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


