திருச்செந்தூரில் மாசித் திருவிழா 12 ஆம் நாளான புதன்கிழமை இரவு சுவாமி, அம்மன் தனித்தனி மலா்க்கேடய சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதைத் தொடா்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றன.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப். 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. 12 ஆம் திருநாளான புதன்கிழமை மாலை மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் சுவாமி, அம்மன் வீதி உலா வந்து, வடக்குரத வீதியில் உள்ள 14 ஊா் செங்குந்தா் முதலியாா் திருவிழா மண்டபத்தை அடைந்தனா்.
அங்கு உற்சவா்களுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சுவாமி குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி மலா்க்கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தா்களுக்கு காட்சியளித்து, கோயிலை அடைந்தனா். இதையடுத்து திருவிழா நிறைவு பெற்றது.
ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா

பண்ணாரி அம்மன் உற்சவா் வீதி உலா: தேங்காய் உடைத்து பக்தா்கள் வழிபாடு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா: சுவாமி சிகப்பு சாத்தி வீதி உலா

திருச்செந்தூா் மாசித் திருவிழா 4 ஆம் நாள்: சுவாமி, அம்மன் வீதி உலா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


