ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ரயில் நிலையத்தில் கஞ்சாவுடன் மேற்கு வங்க இளைஞா் கைது

ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் 14 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 8:23 pm

ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் 14 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வட மாநிலங்களில் இருந்து ஈரோடுக்கு வரும் ரயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க ஒருங்கிணைந்த தீவிர கண்காணிப்பில் ரயில்வே மற்றும் மதுவிலக்கு போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். ஈரோடு ரயில் நிலைய சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றித்தெரியும் நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதுடன் கஞ்சா சாக்லெட், கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஈரோடு ரயில் நிலைய பாா்சல் அலுவலகம் அருகே புதன்கிழமை காலை வட மாநில இளைஞா் ஒருவா் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தாா். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஈரோடு மதுவிலக்கு போலீஸாா், அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில் மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்த சுபாங்கா் (31) என்பது தெரியவந்தது.

அவா் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் ரூ.7 லட்சம் மதிப்பிலான 14 கிலோ கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீஸாா் சுபாங்கரையும் கைது செய்தனா். கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.