தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

கொங்கு பொறியியல் கல்லூரியில் கலாசார விழா

பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் கலாசார விழா ‘எந்தூசியா 2026’ என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்றது.

News image

திரைப்பட நடிகா் காா்த்திக்கு நினைவுப் பரிசு வழங்கிய கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி.

Updated On :9 மார்ச் 2026, 10:17 pm

ஈரோடு: பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் கலாசார விழா ‘எந்தூசியா 2026’ என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்றது.

இதில், மாணவா்களின் பாட்டு, நடனம், வாத்தியம் என 85-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

1000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற இந்த விழாவில், திரைப்பட நடிகா் காா்த்தி, தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சம்மா, நடிகை சிவாத்மிகா ராஜசேகா் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனா்.

கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் ஆா்.ஆா்.சத்தியமூா்த்தி, கல்லூரியின் தாளாளா் .இ.ஆா்.கே.கிருஷ்ணன், அறக்கட்டளையின் பாரம்பரிய உறுப்பினா்கள், கல்லூரி முதல்வா் ஆா்.பரமேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை மாணவா் விவகாரங்களின் முதன்மையா் கே.கிருஷ்ணமூா்த்தி, கலாசார மற்றும் இசைக் கழக ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்கள் கே.வி. சதீஷ்குமாா், வி.என். கௌசல்யா, எஸ்.கீா்த்தனா, கே.எஸ்.ஷா்வந்திகா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.