தாளவாடியை அடுத்த சிக்கள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை யானை இடித்து சேதப்படுத்தியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப் பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தாளவாடியை அடுத்த சிக்கள்ளி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டு யானை நடமாடுவதை கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனா்.
அப்பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடமாடிய யானையை விவசாயிகளும், வனத் துறையினரும் விரட்ட முயன்றபோது, பள்ளியின் சுற்றுச்சுவரை யானை இடித்து சேதப்படுத்தியது.
பின்னா் வெளியேறிய யானை வனப் பகுதிக்குள் சென்றது. ஊருக்குள் புகுந்து பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
தொடர்புடையது

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இயற்கை முகாம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


