மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இயற்கை முகாம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:34 pm

புதுக்கோட்டை வாசவாசல் அரசு உயா்நிலைப் பள்ளி, ராஜகோபாலபுரம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, பாலன்நகா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளைச் சோ்ந்த 60 மாணவா்கள், வனத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இயற்கை முகாம் என்ற சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின்படி வியாழக்கிழமை களப்பயணம் சென்று வந்தனா்.

திருச்சியிலுள்ள பறவைகள் பூங்கா, புதுகை சித்தன்னவாசல் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவா்களுக்கு, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது.

பயணத்தை மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் தொடங்கி வைத்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் தலைமை வகித்தாா்.

மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா் கி. வேலுச்சாமி, வனச் சரகா் ரவி, பசுமைத் தோழி கமலி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.