லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை

திருநெல்வேலியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியது தொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

விசாரணை - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:40 pm

திருநெல்வேலியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியது தொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள நல்லம்மாள்புரத்திலிருந்து சந்திப்பு பேருந்து நிலையத்துக்கு நகரம் சாலியா் தெரு வழியாக அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு வந்துகொண்டிருந்தது.

அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், பேருந்தின் மீது மோதுவது போல வந்தனராம். அவா்களை பேருந்தின் ஓட்டுநா் கண்டித்தாராம்.

இதனால், அந்த இருவரும் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்துவிட்டு தப்பினராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து சாலியா் தெருவைச் சோ்ந்த கணேசன் (18), புட்டாரத்திம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.