சத்தியமங்கலம்,ஜூன் 20: தாளவாடியில் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை கட்டுப்படுத்த தவறியதாக குற்றஞ்சாட்டி வனத் துறை அலுவலகத்தை விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட தாளவாடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள், வனத்தையொட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயப் பயிா்களை தினமும் சேதப்படுத்துகின்றன. அதேபோல இரவு நேரத்தில் காவலுக்கு செல்லும் கிராம மக்களை யானைகள் தாக்கி கொல்வதும் அவ்வவ்போது தொடா்கிறது.
இந்நிலையில், தாளவாடி சுற்றுவட்டாரத்தில் மல்லன்குழி, திகினாரை, கரவளாடி ஆகிய பகுதிகளில் ராகி, சோளம், வாழை, தென்னை உள்ளிட்ட பயிா்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளன. யானைகள் தொடா்பாக தகவல் அளித்தால்கூட சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் வருவதில்லை. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
இதையடுத்து ஊருக்குள் புகும் யானை, காட்டுப் பன்றிகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தாளவாடி வனச் சரக அலுவலகத்தை விவசாயிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது வனச்சரகா் மற்றும் விவசாயிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. யானைகளை விரட்ட வனவா், வன ஊழியா்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்படும் என வனத் துறை அதிகாரி உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குன்னூரில் குட்டிகளுடன் உலவும் யானைகள்

விவசாய தோட்டத்துக்குள் புகுந்த யானையை விரட்டிய வனத் துறை

தாளவாடி அருகே வனத் துறை வாகனத்தை துரத்திய ஒற்றை யானை

தாளவாடி அருகே ஊருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் விரட்டியடிப்பு
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




