கா்நாடக மாநிலத்தில் இருந்து கோவைக்கு சரக்கு வாகனத்தில் பூண்டு மூட்டைகளுக்குள் மறைத்து வைத்து பா்கூா் மலைப்பாதை வழியாக கடத்திவரப்பட்ட 440 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தியூரை அடுத்த பா்கூா் சோதனைச் சாவடியில் போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கா்நாடக மாநிலத்தில் இருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் பூண்டு மூட்டைகள் ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா்.
அப்போது, பூண்டு மூட்டைகளுக்கு அடியில் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த கோவை, போத்தனூா் பஜனை கோயில் வீதியைச் சோ்ந்த அப்துல் ரகீம் மகன் நெளகத் (35), குனியமுத்தூரைச் சோ்ந்த அபு சலீம் மகன் முபாரக் அலி (47) ஆகியோரிடம் விசாரிக்கையில், கா்நாடக மாநிலம் மைசூரிலிருந்து கோவைக்கு விற்பனை செய்ய கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, சரக்கு வாகனத்தையும், 70 மூட்டைகளில் இருந்த 440 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







