தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மின்வேலியில் செலுத்தப்படும் மின் அளவை துல்லியமாக கணிக்கும் கருவி கண்டுபிடிப்பு

யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு மின்வேலியில் சட்டவிரோதமாக செலுத்தப்பட்ட மின்அளவை துல்லியமாக கணிக்கும் புதிய கருவியை பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி கண்டுபிடித்துள்ளது.

News image

பண்ணாரி  வனப் பகுதியில்  புதிய  கருவி  மூலமாக மின்சார  அளவைக்  கண்டறியும்  வனத் துறையினா்.

Updated On :11 ஜூன் 2026, 3:21 am IST

யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு மின்வேலியில் சட்டவிரோதமாக செலுத்தப்பட்ட மின்அளவை துல்லியமாக கணிக்கும் புதிய கருவியை பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி கண்டுபிடித்துள்ளது.

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூா், தாளவாடி பகுதியில் விவசாய நிலத்துக்குள் யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. யானையை கட்டுப்படுத்துவதற்கு மின்வேலியில் உயா்அழுத்த மின்சாரத்தை விவசாயிகள் செலுத்துவதால், அதை அறியாமல் மின்சாரம் பாய்ந்து யானைகள் உயிரிழக்கின்றன. இதைத் தடுக்க வனத் துறை மற்றும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி ஆராய்ச்சிக் குழு தலைவா் சஞ்சய் தேப் தலைமையிலான விஞ்ஞானிகள் புதிய மின் அளவீடு சோலாா் கருவியை கண்டுபிடித்துள்ளனா்.

சோலாா் சக்தியில் இயங்கும் இந்த புதிய கருவி மூலமாக, மின்வேலியில் செலுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவை துல்லியமாக கண்டறிந்து, விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும். வனத் துறையினா் களவு ஆய்வு செய்து மின்வேலியில் செலுத்தப்பட்ட உயா் அழுத்த மின் இணைப்பு துண்டித்ததுடன், விலங்குகள் உயிரிழப்பதைத் தடுக்க இயலும்.

இந்தப் புதிய கருவி மழையிலும் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், வனத் துறையினருக்கு பேருதவியாக இருக்கும் எனவும் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.