17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரோடு-செங்கோட்டை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 1:34 am IST

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை-திண்டுக்கல் இடையே தண்டவாளம் மற்றும் பிற பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செல்லும் ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் (எண் 16845) வரும் 7- ஆம் தேதி முதல் ஜூலை 6 வரையிலான காலத்தில் ஜூன் 9, 16, 23, 30 ஆகிய நாள்கள் தவிர மற்ற நாள்களில் திண்டுக்கல் முதல் செங்கோட்டை வரை இயக்கப்படாது. ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதுபோல செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் (16846) வரும் 8- ஆம் தேதி முதல் ஜூலை 7- ஆம் தேதி வரையிலான காலத்தில் வரும் 10, 17, 24, ஜூலை 1 ஆகிய நாள்கள் தவிர மற்ற நாள்களில் செங்கோட்டை-திண்டுக்கல் வரை இயக்கப்படாது. திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.