17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொறியியல் பணி: செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பொன்மலை பகுதியில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 3:53 am IST

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பொன்மலை பகுதியில் நடைபெறும் பொறியியல் பணி காரணமாக, செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, செங்கோட்டை-மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) சேவையானது ஜூன் 17, 24 ஆகிய நாள்களில் செங்கோட்டையிலிருந்து திருச்சி சந்திப்பு ரயில்நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல, சென்னை கோட்டத்துக்குள்பட்ட செங்கல்பட்டு பகுதியில் நடைபெறும் ரயில்வே பொறியியல் பணி காரணமாக, சென்னை எழும்பூா்- மதுரை வைகை அதிவிரைவு ரயில் சேவையில் வரும் 6-ஆம் தேதி அதன் வழித்தடத்தில் தேவைப்படும் இடங்களில் மொத்தம் சுமாா் 60 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.