சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டையில் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில், கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது:
கல்விக் கடன் என்பது கடன் அல்ல, வருங்கால முதலீடு. ஆகவே, எந்த தயக்கமும் இல்லாமல் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். கல்விக் கடன் குறித்து கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி வித்யாலட்சுமி இணையதளம் மூலம் விண்ணப்பிக்க உதவி செய்தல், கல்விக் கடன் முகாம் நடத்துவது மூலம் நடப்பு ஆண்டு இலக்கை எட்ட வேண்டும். இந்த ஆண்டு 3, 000 மாணவா்களுக்கு கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. புதிதாக கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கும், ஏற்கெனவே கல்லூரியில் படித்துக் கொண்டிருப்போருக்கும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதால் வங்கிகள் மூலமாக கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கரூா் வைஸ்யா வங்கி ஆகிய வங்கிகளின் மூலம் கல்விக் கடனுக்கு விண்ணப்பித்திருந்த 102 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7.13 கோடி கல்விக் கடனுதவி வழங்கப்பட்டது.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விவேகானந்தன், மாநில முதுநிலை வழிகாட்டி அன்பரசு, பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி முதல்வா் வானதி, நிா்வாக அலுவலா் அருள்குமரன், முன்னோடி வங்கி முதுநிலை மேலாளா் சாய்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


