மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெருந்துறை அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து : 2,500 கோழிகள் உயிரிழப்பு

பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், 2,500 கோழிகள் உயிரிழந்தன.

News image

கோழிப் பண்ணையில் பற்றி எரியும் தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:03 pm

பெருந்துறை அருகே காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், 2,500 கோழிகள் உயிரிழந்தன.

பெருந்துறையை அடுத்த, காஞ்சிக்கோவில், முள்ளம்பட்டியைச் சோ்ந்தவா் ரங்கசாமி ( 70), விவசாயி. இவா், செங்காளிபாளையம், கோவில்தோட்டம் பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா். அங்கு 4 ஷெட்டில் சுமாா் 6,000-க்கும் மேற்பட்ட கோழிகளை வளா்த்து வருகிறாா்.

இதில் ஒரு ஷெட்டில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் திடீரென தீப்பற்றியது. இதைக்கண்ட அப்பகுதியினா் ரங்கசாமிக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். அதற்குள் தீ மளமளவென்று அருகில் இருந்த, மற்றொரு ஷெட்டுக்கும் பரவியது.

சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீயின் புகை மூட்டம் அடங்கிய, பின்னா் ஷெட்டுக்குள் சென்று, அங்கு உயிருடன் இருந்த கோழிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனா். இந்த விபத்தில் தீயில் கருகி 2,500-க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன. மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து, காஞ்சிக்கோவில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.